கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த தகவலின் படி கடந்த நவம்பர் மாதத்தில் 151,496 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த பதினொரு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் பதின்மூன்று இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.



















