வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக குறித்த தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டியா? என்ற கேள்விக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தார்கள்.
ஆனால் தற்போது மும்முனைப்போட்டி இடம் பெற உள்ள ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் வினாவிய போது , அவ்வாறு ஒரு நிலை இருந்ததாகவும் போட்டிக்கான காலம் நிறைவடைந்துள்ளதாலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ளதால் கையொப்பம் இடுவதில் தாமதம் ஏற்ப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்த நிலையில், இன்று தமிழர் சிக் கட்சியின் தலைமை பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகின்ற எழுத்து மூல ஆவணங்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் போட்டியிடுகின்றார் என்ற விவரத்தை அரியநேந்திரன் ஊடகவியலாளர்களிடம் மறைப்பதற்கான காரணம் என்ன? என்ற சந்தேக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.