ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெயரிட்டுள்ளார்.
இதன் தலைவராக முன்னாள் தலைவர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வீரர்களான தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ் மற்றும் இந்திக டி செரம் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
புதிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு
இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு வீரர்களை கொண்ட புதிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன்படி முன்னாள் தொடக்க வீரர் உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் மற்றும் முன்னாள் தொடக்க வீரர் தரங்க பரணவிதான ஆகியோர் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.