கனடாவில் அதிக செலவு மிக்க நகரமாக கல்கரி நகரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அடிப்படைச் செலவுகள் அதிகமாக காணப்படும் கல்கரி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளை வெப்பமாக வைத்திருப்பதற்காகவும் உணவு செவுகளுக்காவும் கல்கரி நகரில் ஒப்பீட்டளவில் ஏனைய நகரங்களை விடவும் கூடுதலாக செலவிட நேரிட்டுள்ளது.
கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
வீட்டு வாடகை, உணவு, உடை மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளை உள்ளடக்கிய மார்கட் பாஸ்கட் மெஸர் எனப்படும் சுட்டியின் அடிப்படையில் கல்கரியில் செலவு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவை விடவும் கல்கரியில் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.