நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வெட் வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.