பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்திலே காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் சடலம் அவரது வீட்டின் பின்புறத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலுக்குள்ளான பெண்ணின் உடலின் சில பகுதிகள் வேறு மிருகங்களால் கடிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.