பொதுவாகவே மனித உடலுக்கு சக்தி மிகவும் அவசியம். எமது உடலில் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும். உடல் வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்துக் கொள்ளும்.
உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதற்கு உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மிளகு பெரிதும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும், இது பாக்டீரிவிற்கு எதிராக செயற்படுகின்றது.
சமையலில் தினமும் பயன்படுத்தும் பூண்டு அதிக ஆரோக்கியத்தைக் கொடுப்பது. இதில் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் உடலில் இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவும்.
சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் இஞ்சி நோய் எதிர்ப்புக்கு தேவையான உந்து சக்தியை உடலுக்கு வழங்குகிறது.
இஞ்சியை போலவே எலுமிச்சையும் சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதில் இயற்கையாகவே அதிக அளவிலான வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது.
தேனில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருக்கிறது. மேலும், தேனில் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் மகரந்தம் உள்ளது, இது கிருமி நாசினியாகவும் செயற்படுகிறது.
வேம்பு உடலை உட்புறமாக குளிர்விப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்காக, பேரீச்சம்பழம், நிலக்கடலை, பாதாம், பைன் பருப்புகள், எள், சூரியகாந்தி விதைகள் என்பவற்றில் ஒமேகா-3, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சளில் உள்ள முதன்மையான பொருட்களில் ஒன்றான குர்குமின், அதிக நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது.இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணைப்புரிகின்றது.