விஜய்
மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் குறித்து பேசியுள்ளார்.
எனக்கு பிடிக்கல
அதில் அவர் பேசுகையில் , இந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய லியோ திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை. கிளைமாக்ஸில் ஒரு ஆள் 200 பேரை எப்படி அடிக்கிறாரோ தெரியவில்லை.
இந்த மாதிரி படங்கள் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ விஜய்யை சமீபத்தில் விமர்சித்த நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் விஜய்யின் லியோ படம் குறித்து பேசி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.