நடிகை சினேகா தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ஆவேசமாக பதில் கூறியுள்ளார்.
நடிகர் சினேகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான “இங்கே ஒரு நீலப்பக்சி” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், சினிமாவில் இருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். நட்சத்திர ஜோடிகளாக இருந்து வரும் சினேகா- பிரசன்னா சமூக வலைத்தளங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வலம் வரும் நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
சொத்து மதிப்பு என்ன?
நடிகை சினேகா தற்போது 40 வயதைக் கடந்துள்ள நிலையில், சினிமாவில் பிஸியாகவே இருக்கின்றார். இவரது கைவசம் நடிகர் விஜய்யின் தளபதி 68 திரைப்படம் உள்ளது.
இந்நிலையில் இவரது சொத்து விபரம் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சினேகாவிற்கு 45 முதல் 50 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இவர் சினிமாவில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் பிசினஸிலும் முதலீடு செய்துள்ளதுடன், புதுவீடுகளுக்கு இன்டீரியர் வேலைகளை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றாராம்.
விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் வருமானம் பெற்று வரும் நடிகை சினேகா தற்போது ஒரு படத்திற்கு ரூ.1கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.