ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதியிலும் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் விசேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்மஸ் வலயம் ஆகியவற்றை நேற்று (20) ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கிறிஸ்மஸ் நிகழ்வை ஏற்பாஅடு செதிருந்தனர்.
கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்வு
ஜனாதிபதி செயலக வளாகத்தில் மின்விளக்குகளை ஏற்றி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்வு இலங்கை கடற்படையின் பாடல் மற்றும் வாத்தியக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன், இந்த கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வானது டிசம்பர் 23ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலக வளாகத்தில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இன்று (21) இலங்கை விமானப்படை, நாளை (22) இலங்கை இராணுவம், டிசம்பர் 23ஆம் திகதி இலங்கை பொலிஸ் பிரிவினரும் பாடல் மற்றும் வாத்தியக் குழுவினரும் இணைந்து கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
நிகழ்வுகளில் ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.