அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து கொண்ட மட்டக்களப்பு செட்டிபாளையத்தை பூர்விகமாக கொண்ட இளைஞன் மிக இளவயதில் சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் மட்டக்களப்பு இளைஞன்
மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த தற்போது அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்துவரும் ஹரி பிரதீபன் என்ற இளைஞன் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் அதிகாரியாக இணைந்து கொண்டான். ஹரி பிரதீபனின் தாயார் செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.
இவர்கள் தற்போது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது மெல்பனில் வசிக்கும் குறித்த ஹரி பிரதீபன் எனப்படும் இளைஞன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுவயதில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு தெரிவாகியுள்ள ஹரியை அவுஸ்திரேலிய படை பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.