கனடாவின், நோவா ஸ்கோட்டியாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நோவா ஸ்கோட்யா மாகாணத்தின் நியூ கிளாஸ்கோவ் பகுதியின் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்த சில மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குள் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.