அநுராதபுரம் மைலகஸ்சந்தியை அண்மித்த ஹோட்டல் அறையில் ஆண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில், மணமகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பரசங்கஸ்வெவ, வரகொட பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய இந்திக ரணவீர பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொலைபேசி பழுதுபார்க்கும்
அவர் அநுராதபுரத்தில் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழில் ஈடுபட்டு வந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 21 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இருவரும் மைலகஸ்சாந்தி அருகே உள்ள ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அந்த தம்பதியில் பெண்ணுக்கு தலைவலி ஏற்பட்டதாகவும் அதற்காக கணவர் கொடுத்த மருந்துகளை உட்கொண்டவுடன் உறங்கிவிட்டதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
கண்விழித்த போது அறையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் கணவன் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக, மனைவி குறிப்பிட்டுள்ளார்.