ஜப்பானில் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம்(01.01.2024) காலை மத்திய ஜப்பானின் இசிக்காவா பகுதியில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இவ்வாறு குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
7.6 ரிக்டர் அளவில் இந்த பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன்படி, இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், விரைவாக உயரமான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அங்குள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.