பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்காவின் நிஜப் பெயர் Vangelia Pandeva Gushterova என்பதாகும்.
இளவரசி டயானாவின் மரணம், Kursk என்னும் ரஷ்ய நீர்மூழ்கி மூழ்கி விபத்து, 9/11 தீவிரவாத தாக்குதல்கள், கோவிட் என பல விடயங்களை துல்லியமாக கணித்தவராக பாபா வாங்கா விளங்குகின்றார்.
மலர்ந்திருக்கும் 2024 ஆம் ஆண்டிலும், உலகத்தலைவர்கள் சிலர் கொல்லப்படுவது, உயிரி ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் என சில கணிப்புக்களை குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான கணிப்புக்கள்
அவ்வாறு அவர் கணித்த கணிப்புக்களாவன,
2024ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் தீவிரத்தாக்குதல்கள் நடக்கும் என கணித்துள்ள பாபா, உலகின் பெரிய நாடு ஒன்றில் உயிரி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் என கணித்துள்ளார்.
இவ்வாண்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் அதிகரிக்கும் கடன் மற்றும் புவிசார் பதற்றங்களால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் குழப்பம் உருவாகும் என்றும் கணித்துள்ளார்.
அத்துடன் ஆண்டு முழுவதும் மோசமடையும் பருவநிலை, பயங்கர இயற்கை பேரழிவுகள், சைபர் தாக்குதல்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மீது தாக்குதல்கள் முதலான விடயங்களும் பாபாவின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் அடங்குகின்றது.
இக்கணிப்புகளுக்கு முன்னரே ரஷ்ய ஜனாதிபதி புடின் அவரது நாட்டவர் ஒருவராலேயே கொல்லப்படுவார் என்பதைக் குறித்து பல முறை செய்திகள் வெளியாகிவிட்டன.
உக்ரைன் போர் தொடரும் நிலையில் புடினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால், உலகில் பல குழப்பங்கள் உருவாகக்கூடும்.
நன்மையான கணிப்புக்கள்
இதேவேளை பாபா 2024 ஆம் ஆண்டு குறித்து கணித்துள்ள நன்மையான விடயங்களாக அல்ஸீமர், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு 2024இல் புதிய சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படும் என்றும், குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.
மேலும், 2028இல் உலகத்தில் பசி என்பது முடிவுக்கு வந்துவிடும் என்றும், 2076இல் கம்யூனிஸம் மீண்டும் திரும்பும் என்றும் 2304இல் மனிதர்கள் டைம் ட்ராவல் என்னும் விடயத்தை கண்டறிந்துவிடுவார்கள் என்றும் கணித்துள்ளார்.