ஷோபா சந்திரசேகர்
எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ஷோபா சந்திரசேகர். இவர் தற்போது தனது கணவர் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்து துபாய்க்கு சென்றுள்ளார்.
துபாய்யில் ஷோபா சந்திரசேகரின் அண்ணன் எஸ்.என். சுரேந்தர் அவர்களின் மகள் பல்லவி வினோத் குமார் தனது கணவருடன் செட்டிலாகியுள்ளார். அங்கு தனது மருமகள் பல்லவியுடன் நேரத்தை செலவழித்து வருகிறார் ஷோபா.
சமீபத்தில் கூட புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மாமா மற்றும் அத்தை என குறிப்பிட்டு பல்லவி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அப்போது தான் பலருக்கும் தெரிய வந்தது, இவர் விஜய்யின் மாமன் மகள் என்று.
மருமகளுடன் ரீல்ஸ்
இந்நிலையில் தற்போது பல்லவி வினோத்குமார் தனது அத்தை ஷோபா சந்திரசேகருடன் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே ஷோபா சந்திரசேகர் செய்த ‘So Beautiful So Elegant Just Looking Like A Wow’ ரீல்ஸ் வீடியோ வைரலான நிலையில் தற்போது மீண்டும் ஒரு க்யூட் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram