பாக்கியலட்சுமி
சின்னத்திரையில் டாப் TRP ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப ரசிகர்களின் மனதை தொடும் ஒவ்வொரு சீரியல்களும் மாபெரும் அளவில் வெற்றியடையும்.
அப்படி தான் பாக்கியலட்சுமி சீரியலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கிய இந்த சீரியல் தற்போது வரை வெற்றிநடைபோட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஜெனி – செழியன் விவாகரத்து விஷயம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தனது கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூறி ஜெனி, செழியனை விட்டு பிரிய நினைக்கிறார்.
பரபரப்பான கட்டம்
இந்நிலையில், நீதிமன்றத்தில் தனது மனைவி ஜெனியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கண்கலங்கி கதறி அழுகிறார் செழியன்.
இதை பார்த்து ஜெனியும் கண்கலங்குகிறார். ஜெனி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் பார்ப்போம். இந்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி ப்ரோமோ வீடியோ இதோ..