பிக் பாஸ் டைட்டில் வின்னர்
106 நாட்களின் பயணம் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. யார் அந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இதுவரை வெளிவந்த தகவலின்படி அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என கூறப்படுகிறது. வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றுவிட்டார் என உறுதியாக கூறப்படுகிறது.
உண்மையான வெற்றியாளர் இவரா
ஆனால், மற்றொரு புறம் இவர் வேறொரு போட்டியாளரை குறிப்பிட்டு இவர் தான் பிக் பாஸ் 7ன் உண்மையான வெற்றியாளர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அவர் வேறு யாருமில்லை பிரதீப் ஆண்டனி தான். ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி தான் மக்கள் மனதை வென்ற உண்மையான பிக் பாஸ் போட்டியாளர் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
பிரதீப் ஆண்டனி தான் உண்மையான வின்னர் என குறிப்பிட்ட இந்த விஷயத்தை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.