திருகோணமலையில் உள்ள கிண்ணியா, வட்டமடு பகுதியில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது.
மேலும், குறித்த மாதுளை தோட்டச் செய்கையை அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு வருவதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் ஒருவரின் முயற்சியினால் இந்த மாதுளை தோட்டச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 1 கிலோ 1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
மாதுளை தோட்டச் செய்கை கிண்ணியா வரலாற்றில் முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
வட்டமடு பகுதியில் ஏனைய சேனைப் பயிர்ச்செய்கை பலராலும் மேற்கொள்ளப்பட்டாலும் விசேடமாக மாதுளை செய்கை ஒரு புது விதமான உற்பத்தி செய்கையாக பார்க்கப்படுகிறது.
பழ வகைகளில் பல மருத்துவ நற்குணங்களை கொண்ட மாதுளை பழங்களுக்கு அதிக கிராக்கியாகவும் காணப்படுகிறது.
மக்களின் பார்வையில் அதிக வரவேற்பை பெற்று விளங்குவதுடன் விசேடமாக அதிக பார்வையாளர்களை கிண்ணியா மாதுளை தோட்டம் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.