இலங்கையில் வற் வரி அதிகரிப்பு மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்டி வருகின்றது.
யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காண கூடியதாக உள்ளது.
இதேவேளை, நாளைய தினம் (15-01-2023) பொங்கல் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களினால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.