திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
திரையுலகில் மூத்த நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன் தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் பிரபாஸ், கமல் ஹாசனின் கல்கி 2898 AD என்கிற திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சொத்து மதிப்பு
அமிதாப் பச்சனின் தற்போதைய திரைவாழ்க்கை இப்படி சென்றுகொண்டிருக்க 2024ஆம் ஆண்டில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமிதாப் பச்சனின் முழு சொத்து மதிப்பு ரூ. 3200 கோடி வரை இருக்குமாம். மேலும் இவர் ஒரு ஆண்டுக்கு ரூ. 60 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
வருட வருமானம்
திரைப்படங்கள் மட்டுமின்றி பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் விளம்பர படங்களில் தான் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட வீடு
இந்திய திரையுலகின் மூத்த நட்சத்திரமாக இருக்கும் அமிதாப் பச்சனின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 80 கோடி முதல் ரூ. 100 கோடி ஆகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
பயன்படுத்தும் கார்ஸ்
Mercedes-Benz S-CLass – ரூ. 1.71 கோடி
Lexus LX570 – ரூ. 2.82 கோடி
Mercedes-Benz V Class Variants – ரூ. 1.10 கோடி
Range Rover Autobiography LWB – ரூ. 3.28 கோடி
மற்றும் பல விலைஉயர்ந்த கார்களை கூட அமிதாப் பச்சன் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.