நடிகர் விக்ராந்த்
திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் தம்பி என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த அழகன் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதன்பின் கடந்த 2005ஆம் ஆண்டு கற்க கசடற எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து முத்துக்கு முத்தாக, பாண்டியா நாடு, கவண், கெத்து உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகனாக லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. இப்படம் கண்டிப்பாக விக்ராந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமான இருக்கும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
விக்ராந்தின் மகன் புகைப்படம்
நடிகை விக்ராந்த் பிரபல சீரியல் நடிகை மானசா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் விக்ராந்த் தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என கேட்டு வருகிறார்கள். தனது மகன் கிரிக்கெட் விளையாட்டில் Under 14 விளையாட போகிறார் என கூறி மகிழ்ச்சியுடன் இந்த பதிவை விக்ராந்த் வெளியிட்டுள்ளார்.
விக்ராந்த்தும் கிரிக்கெட் விளையாட்டில் மிரட்டுவார் என்பதை நாம், CCL – Celebrity Cricket League போட்டியில் பார்த்து இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ராந்தின் மகன் புகைப்படம் இதோ..