வெறுமனே உங்கள் அரசியல் நோக்கத்திற்காக கடற்றொழிலாளர்களை பலிக்கடா ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வடமராட்சி ஊடக மையத்தில் நேற்று (21.01.2024) நடத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேல்மட்ட அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்டார்கள்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் இதேபோன்று ஏன் இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.




















