வடிவேலு
உடல் மொழி நகைச்சுவையில் அமர்க்களம் பண்ணும் நடிகர்களில் ஒருவர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவருடைய மீம் நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்து கொண்டே இருந்தது.
இதன்பின் அனைத்து பிரச்சனைகளும் ஒருவழியாக முடிவுக்கு வர, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வடிவேலுவுக்கு கைகொடுக்கவில்லை.
இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
திரையில் நல்ல நடிகர் என பெயர் எடுத்திருந்தாலும், தனக்கு தானே இவர் ஏற்படுத்திக்கொண்ட பிரச்சினையினால் இன்று வரை பல சர்ச்சைகள் இவரை சுற்றி பேசப்பட்டு கொண்டே இருக்கிறது.
வடிவேலுவின் மகன்
இந்நிலையில், நடிகர் வடிவேலு மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு மகனின் திருமணம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், அச்சு அசல் தனது தந்தை வடிவேலு போலவே இருக்கிறாராரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..