கொழும்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நாளில் கணவர் கொடுத்த 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிச் சென்றதாக 22 வயது பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு 12 ஸ்ரீமன் பண்டாரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், 23 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்திற்கு மேலதிகமாக, 60 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி தனது திருமணம் நடைபெற்ற நிலையில் தங்க நகைகளை அலுமாரியில் வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தங்கம் திருட்டு
இதில் கணவரால் பரிசாக கொடுக்கப்பட்ட சுமார் 23 லட்சம் மதிப்பிலான தங்கப் நகைகள் மற்றும் சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது சொந்த தங்கப் நகைகள் அனைத்தும் பெட்டிகளில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்
கடந்த 18ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் தங்கம் வைத்திருந்த அலுமாரியின் சாவியை ஒரு பையில் வைத்து ஒரு இடத்தில் வைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
வீட்டில் பணிப்பெண்ணும் தந்தையும் மட்டுமே இருந்ததாகவும், சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாகவும், பையில் இருந்த சாவியை தேடி பார்த்தபோது சரியான இடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை அலுமாரியின் பூட்டை உடைத்து பார்த்தபோது, அங்கு தங்கப் பொருட்கள் எதுவும் இல்லை என அவர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.