அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஜோடி விவகாரத்து செய்யவுள்ளதாக மீண்டும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஐஸ்வர்யா தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்ய முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.
இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.
அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜஸ்வர்யா ராய்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் சமிபகாலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுவதால் இவர்கள் பிரிந்து விட்டார்களா? என பலர் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பொது நிகழ்வில் மகள், மாமனார், அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் என குடும்பத்திலுள்ள அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அயோத்திக்கு தனியாக வந்தது ஏன்?
இதனை தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோயிர் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இதில் அபிஷேக் பச்சன் தனியாக கலந்து கொண்டிருந்தார்.
பிரபலங்கள் ஜோடியாக வரும் பொழுது அபிஷேக் பச்சன் தனியாக வந்திருந்தது மீண்டும் விவாகரத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமனாருக்கும் நல்ல புரிதல் இருக்கின்றதாம்.
மாமியார் ஜெயா பச்சனால் தான் அபிஷேக் பச்சனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இவர்கள் இருவரும் தங்கள் மகளுக்காக தான் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகின்றது.
இவ்வளவு விமர்சனங்கள் தொடர்ந்தாலும் “பிரிந்துவிடலாம் என முடிவெடுத்து விட்டார்களா இல்லையா?” என்பது இன்னும் இரு தரப்பில் இருந்தும் உறுதியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.