“என்னுடைய கணவர் இறந்த பின்னர் அவரின் புகைப்படத்தை பார்த்து பல முறை அழுது இருக்கிறேன் ” என நடிகை சண்முகப்பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010 – 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒளிபரப்பான சீரியலில் “ராகினி ”கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.
இதனை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். இதிலும் சண்முகப்பிரியாவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
இதற்கடுத்தபடியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சண்முகப்பிரியா, அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணவர் இறப்பிற்கு பின் வெளியான முதல் பேட்டி
திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இருவரும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்தனர்.
மாறாக திடீரென ஒரு நாள் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இது சண்முகப்பிரியாவை போல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சண்முகப்பிரியா, “தவறான கருத்துக்களை பகிர வேண்டாம். குடும்பத்திலுள்ளவர்களுக்கு கவலையாக இருக்கின்றது..” என பேசி வீடியோவொன்றை பகிர்ந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், “என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என என்னுடைய கணவரின் புகைப்படத்தை பார்த்து கோடி தடவைக்கு மேல் நான் அழுது இருக்கிறேன்.” என உருக்கமாக பேசியுள்ளார்.