நீதிமன்ற உத்தரவின் பேரில் மீனகயா ரயிலின் ( கொழும்பு – மட்டு) உணவுச்சாலைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவை விற்பனை செய்தமை தொடர்பிலேயே மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை மீனகயா ரயிலின் உணவுச்சாலைக்கு சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதபாவனைக்கு உதவாத உணவு ;கொழும்பு – மட்டு ரயில் உணவுச்சாலைக்கு சீல் ! | Sealed For Colombo Battigaloa Train Canteen
சிற்றுண்டிச்சாலை சோதனை
கடந்த 22ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலையை சோதனை செய்திருந்தனர்.
இதன்போது மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் தெரியப்படுதியிருந்தனர்.
இதையடுத்து, குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உணவை விநியோகித்த உணவகம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதுவான் உத்தரவிட்டிருந்தார்.



















