இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தற்போது பவதாரணியின் உடல் தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஓதுவார்கள் சிவபுராணம் பாடி வருகின்றனர்.
பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை பவதாரணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில்,பெருமளவான திரைப் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இளையராஜா மகள் பாடகி பவதாரணி சிறுநீரக புற்றுநோயால் நேற்றைய தினம் இலங்கையில் உயிரிழந்திருந்தார்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் இன்று சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது வைக்கப்பட்டு இன்று (27.02.204) இறுதி கிரியைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.