பவதாரிணி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் சிகிச்சைக்காக இலங்கை சென்றிருக்கிறார்.
சிகிச்சை தொடங்கிய சில நாட்களிலேயே அவரது உயிர் பிரிந்தது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளவே முயடிவில்லை. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவருக்கு புற்றுநோய் இருப்பதே தாமதமாக தெரிந்துள்ளது.
கடந்த ஜனவரி 25ம் தேதி இறந்தவரின் உடல் இன்று தேனியில் அவரது சொந்த ஊரில் தனது பாட்டி மற்றும் தாயார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
கடைசி நாட்கள்
தனது நோயின் தீவிரத்தை தெரிந்துகொண்ட பவதாரிணி சிகிச்சைக்கு இலங்கை செல்வதற்கு முன் நண்பர்கள், சித்தப்பா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன், கார்த்திக் ராஜா என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டாராம்.
அனைவருக்கும் பிடித்ததையும் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளிவர பவதாரிணி தனது மரணத்தை ஏற்கெனவே கணித்துவிட்டாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.