கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளது.
புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து புத்தளம் ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.