எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘புதிய கூட்டணி’ ஆதரவளிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ‘நியூ அலையன்ஸ்’ என்ற புதிய கூட்டமைப்பு அதன் ஆரம்ப பொது பேரணியை நடத்தியது.
இந்த ஆரம்ப பேரணி ஜா-எலவில் நேற்று(27.01.2024) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘புதிய கூட்டணி’ ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கூட்டமைப்பின் செயற்பாட்டுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா செயற்படுகின்றார்.
இந்த ஆரம்ப பேரணியில் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ,சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.