இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் உயிரிழப்பு திரையுலகினர் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
திரைப்பட பின்னணி பாடகியான பவதாரணி தனது வித்தியாசமான குரல் மூலம் பல பாடல்களை பாடி உள்ளார்.
மேலும் பாடகி பவதாரணி தனது பாடல்கள் மூலம் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
2005 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் வைத்து பாடகி பவதாரணிக்கும் பிரபல விளம்பர தொழிலதிபர் சபரி ராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இவர்களுடைய ரிசப்ஷன் சென்னையில் உள்ள மேயர் ராமநாதா திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளரான எஸ் என் ராமச்சந்திரன் மகன் தான் சபரிராஜ்.
இந்த தம்பதிகளுக்கு இன்றுவரை குழந்தை இல்லை என்பது வருத்தமான ஒன்றாகும். இவ்வாறான நிலையில் பாடகி பவதாரணி மறைவு அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.