தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சேகர் கமூலா இயக்கத்தில் 51 வது படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தில் உருவாகிவரும் நிலையில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படபிடிப்பால் பொதுமக்கள் பலர் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் இன்று காலை நடைபெற்றது.
இதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள், தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் செல்லும்படி பொலிஸார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சிறுவர்கள், வயதானோர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பகுதி மக்கள் தனுஷின் படபிடிப்புக்கு தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கு திருப்பதியில் வழங்கப்பட்ட படப்பிடிப்புக்கான அனுமதியை பொலிஸார் ரத்து செய்துள்ளனர்.