2024ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் திகதியான இன்று தங்கவிலை அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கலவையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று ஜனவரி 31ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பிப்ரவரி 1ஆம் திகதி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,880-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,817க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.80க்கும் ஒரு கிலோ ரூ.77,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.