எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று ஜனாதிபதியின் பேஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.
பொதுஜன பெரமுன
அதற்கமைய, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் வேறு பல தரப்பினரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதால், அதற்கு இணங்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்ற ரீதியில் தமது குழுவிற்கு தனியான கலந்துரையாடல் தேவை என தெரிவித்து அவர் கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.