விஜய் – அரசியல்
அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தான் கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார். அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படம் Goat-ல் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 படத்தை யார் இயக்க போகிறார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கு தயாரிப்பாளர் DVV Entertainment தயாரிப்பில் விஜய் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை DVV Entertainment தரப்பில் இருந்து வெளிவரவில்லை.
தளபதி 69 படம்
இந்நிலையில், இப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்து பேச்சு எழுந்துள்ளது. இதில் ஹெச். வினோத் இப்படத்தை இயக்க பெரிதும் வாய்ப்பு இருப்பதாகவும், விஜய்க்கு அவர் ஒரு கதை கூறி இருப்பதாகவும் தெரிவந்துள்ளது.
இதே போல் அட்லீ, வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் பெயர்களும் இடம்பெறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்று.