யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ள சமபவ்ம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை 1 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமா?
சம்பவத்தில் இரத்தினராஜா உதயகுமார் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்று முன்தினமே விடுமுறை முடிந்து கடமைக்கு திரும்பியுள்ளார்.
நேற்று மதுபானம் அருந்திய பின்னர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். காதல் விவகாரம் காரணமாக இந்த துரதிஸ்டமான சம்பவம் நடந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.