நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் அவருடைய தாய், தந்தையை கூட பார்த்திருக்கிறோம். ஆனால் அவருடன் பிறந்த அவருடைய அண்ணனை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
அஜித்தின் அண்னண்
அஜித்திற்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். இதில் அவருடைய அண்ணன் தான் அணில் குமார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இந்நிலையில், அஜித்தின் அண்னண் அணில் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், நம்ம தல அஜித்தின் அண்ணனா இது என கேட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அஜித் அண்ணனுடைய புகைப்படம் இதோ..
விடாமுயற்சி – ஏகே 63
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கு பிடித்த நடிகரான அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆதிக் என்பது குறிப்பிடத்தக்கது..