மாமாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், மகனும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பேராதனை – முருதலாவ குருகம பிரதேசத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளியான மாரிமுத்து தர்மலிங்கம் (வயது 55) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மகளின் கணவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விவாகரத்துக்கு தயாரான மனைவி
சம்பவத்தில் கைதான 26 வயது இளைஞனிடம் இருந்து பிரிந்து செல்வதற்காக மனைவி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கொண்டிருந்த வேளை மருமகன் மாமாவை கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர் தனது தந்தை மற்றும் ஒரு குழுவுடன் அவர்களது வீட்டின் முன் வந்து அடாவடித்தனமாக நடத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.