மட்டக்களப்பு – ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சுருக்குவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் 3 படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் படகுகளை இன்று (26.02.2024) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.