தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அனுர குமார கனடாவில் தங்கியிருப்பார் என கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கனடா கிளையின் அழைப்பின் அடிப்படையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரொறன்ரோ மற்றும் வான்கூவாரில் மக்கள் சந்திப்புக்கள்
எதிர்வரும் 23 ஆம் திகதி கனேடிய நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு ரொறன்ரோவில் மக்கள் சந்திப்போன்று நடத்தப்பட உள்ளது.
மேலும் எதிர்வரும் 24 ஆம் திகதி வான்கூவாரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பினை அனுரகுமார மேற்கொள்ள உள்ளார்.
அண்மையில் அனுரகுமார திஸாநாயக்க, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் உள்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அதிகளவு பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.