நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவருடைய உடல் நலம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்
நடிகர் அஜித் அண்மையில் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அறுவை சிகிச்சை மேற்க்கொண்டு இருந்தார்.
இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிந்தவுடன் ரசிகர்களிடையில் இது ஒரு அதிர்ச்சி தகவலாக இருந்தது.
பின் அவரது பிஆர்ஓ தரப்பில் இருந்து சரியான தகவல் வர ரசிகர்கள் அமைதியானார்கள்.
அவர் தற்போது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இன்று காலை வீடு திரும்பிவிட்டார் எனவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் எனவும் தெரியவந்துள்ளது.