ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கையான தீர்மானமொன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் கட்சியின் அரசியல் குழு கூடி இந்த முடிவை எடுக்கஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன வேட்பாளர்
அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்வைப்பதா, கூட்டணி அமைக்கப்படுவதா அல்லது பொது வேட்பாளரை முன்வைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி கட்சிக்குள் தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.