ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் மகள் எப்பொழுதும் தந்தைக்கு தேவைத தான் என்பதை மெய்ப்பித்துள்ளார் சஜித்.
57 வயதில் தந்தையான சஜித் பிரேமதாச , தான் தந்தையானமை தொடர்பில் அண்மையில் மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார்.
வைரலாகும் காணொளி
அதோடு மகள் பிறந்த பின்னர் நாட்டளுமன்றில் அவர் தேவையின்றி நிற்பதில்லை எனவும், தனது அலுவல்கள் முடிந்தவுடன் மகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக வீட்டிற்கு விரைந்து செல்வதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சஜித் பிரேமதாச தனது செல்ல மகளுக்கு பாலூட்டி கொஞ்சி விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.