இலங்கையில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மா விலை 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பால் மாவின் விலைகளைக் குறைப்பது தொடர்பில், பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்