2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை கோர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 2376 நேற்றைய (15) தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இணையவழி முறை
இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதியானவர்கள் தேர்வும் இம்முறை இணையவழி ஊடாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி ஊடாக விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்ப காலம் 05.04.2024 அன்றுடன் நிறைவடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.