வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மிதவையானது இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது.
பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் மிதவையில் எழுதப்பட்டுள்ளது.
மக்கள் பார்வை
உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.