ப்ரேமலு
மலையாள படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் தமிழகத்தில் ரூ. 45 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.
உலகளவில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து ப்ரேமலு திரைப்படமும் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
ஆம், நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடிக்க கிரிஷ் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. நேற்று இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், முதல் நாளே தமிழில் வெளிவந்த ப்ரேமலு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.