அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களால் நேற்று இரவு(17) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கு தாக்கல்
இந்நிலையில், தாக்குதலினால் இலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவரும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்தியவர்களில் இதுவரை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20-25 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருபது பேர்
குஜராத் பல்கலைக்கழகத்தின் (அரசாங்கத்தால் நடத்தப்படும்) விடுதிக்குள் சுமார் இருபது பேர் நுழைந்து, வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் தொழுகை நடத்துவதற்கு ஆட்சேபனை எழுப்பியபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
International students (Africa, Uzbekistan, Afganistan etc) studying in Gujarat University @gujuni1949 claim they were beaten up, Stones thrown at them and at their hostel (A-Block), Vehicles destroyed while they were offering Ramazan Taraweeh at a place inside the hostel A-Block… pic.twitter.com/ogJ3h7FUin
— Mohammed Zubair (@zoo_bear) March 16, 2024
அதேவேளை, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆபிரிக்கா உட்பட நாடுகளின் சுமார் 300 சர்வதேச மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.